சப்பாத்தி வெங்காய மசாலா


தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • மல்லித்தூள் 
  • கரம் மசாலா
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை


செய்முறை

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மசிய நன்கு வதக்கவும்.‌

பின்னர், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 

இறுதியாக, ½ ஸ்பூன் கரம் மசாலா, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். 


Previous Post Next Post