தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- அரிசி மாவு
- தயிர்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, ¼ கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
பின், தோசைக்கல்லில் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
