கடலைப்பருப்பு சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • கடலைப்பருப்பு
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • கடுகு 
  • சீரகம்
  • உப்பு
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை 


செய்முறை

முதலில், ½ கப் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வேக வைத்துள்ள கடலைப்பருப்பு, ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும். 
Previous Post Next Post