தேவையான பொருட்கள்
- ரவை
- பால்
- சர்க்கரை
- நெய்
- முந்திரி
- உலர் திராட்சை
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், ஒரு கப் ரவை, மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து லேசாக வறுக்கவும்.
பின் அதனுடன், இரண்டு கப் பால் சேர்த்து கட்டி ஆகாமல் நன்கு கிளறவும்.
ரவை வெந்ததும், ¾ கப் சர்க்கரை, நான்கு ஸ்பூன் நெய், ¼ ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து இறுகும் வரை நன்கு கலந்துவிடவும்.
இறுதியாக, நெய்யில் வறுத்த 10 முந்திரி, 10 உலர் திராட்சை சேர்த்து கலந்துவிடவும்.
