முட்டை மஞ்சூரியன்


தேவையான பொருட்கள்

  • முட்டை
  • மைதா 
  • சோள மாவு 
  • மிளகாய் தூள் 
  • சோயா சாஸ் 
  • தக்காளி சாஸ் 
  • பூண்டு 
  • பெரிய வெங்காயம் 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை

முதலில், நான்கு முட்டைகளை வேக வைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

பாத்திரத்தில், நான்கு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து அதில் தயார் செய்து வைத்துள்ள முட்டையை நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.‌

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, இரண்டு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் ‌ 

பின், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், இரண்டு ஸ்பூன் தக்காளி சாஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கலந்துவிடவும். 

Previous Post Next Post